அப்படி என்றால் நீங்கள் தாரளமாக வழக்கு தொடுக்கலாம்
கிங்க்பிஷர் ஏர்லைன்ஸ் பொறுப்பில்தான் இருந்தது.தவிர மொத்தம் பதிமூன்றரை பவுன் தங்க சங்கிலிகள் போய்விட்டது .சா.கா சாமிநாதன்
18 பிப்ரவரி, 2010 11:36 am அன்று, m rajan <kmurajan@gmail.com> எழுதியது:
நீங்கள் உங்கள் ஊர் வரும் வரை அந்த பெட்டி யார் பொறுப்பில் இருண்டது2010/2/14 SubramaniyanGanesan Swaminathan <madrasipanditji@gmail.com>
நான் கடந்த 4 ஆம் தேதி கிங்க்பிஷர் பிளைட்டில் சென்னையிலிருந்து லக்னோ செல்வதற்கு சென்னை ஏர்போர்ட்டில் என் சூட்கேஸ் லக்கேஜ் புக் செய்தேன் அங்கு ஸ்கேன் செய்து பிளாஸ்டிக் கில் செயின் உள்ளே விட்டு லாக் செய்து பிறகு மேலே ஸ்டிக்கரில் ஒட்டி செய்தார்கள் பிறகு லக்னோ சேர்ந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள் . நடுவில் மும்பையில் வேறு பிளைட் மாறி லக்னோ வந்து என் பெட்டியை எடுத்துக் கொண்டு வீடு வந்து பார்த்தால் பெட்டிக்குள் இருந்த என் இரண்டரை பவுன் கழுத்து சங்கிலிகள் காணவில்லை .இதற்க்கு என்ன செய்வது ? தயவு செய்து சொல்லவும் .S .G . சாமிநாதன்
13 பிப்ரவரி, 2010 3:54 pm அன்று, m rajan <kmurajan@gmail.com> எழுதியது:பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் அலோக்குமார். இவர் கடந்த 99ம் ஆண்டு தனது மனைவியுடன் பாட்னாவிலிருந்து டில்லிக்கு சங்க மித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஆரா ரயில் நிலையம் அருகே, அலோக் பயணம் செய்த பெட்டிக்குள் 5 பேர் நுழைந்தனர். துப்பாக்கி முனையில் அலோக்குமாரிடமிருந்த பணம் மற்றும் அவரது மனைவியின் நகைகளை மிரட்டி பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து ரயில்வே போலீசில் குமார் வழக்கு பதிவு செய்தார். இதற்கிடையில் ரயிலில், தான் கொள்ளையடிக்கப்பட்டதற்கு ரயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு என பாட்னாவில் உள்ள தேசிய நுகர்வோர் குறைகள் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம் அலோக்குமாருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க ரயில்வேக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.அகர்வால் மற்றும் ஜி.எஸ்.சிங் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான வக்கீல், கொலை, கொள்ளை சம்பவங்கள் மாநில சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனை.
இதில் ரயில்வே நிர்வாகத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நஷ்ட ஈடு வழங்குவது என்றால் கொள்ளை நடந்த மாநிலம்தான் வழங்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்ளது. பெட்டிகளில் பயணிகள் ஏறியவுடன் அவற்றின் கதவுகளை மூடி, பூட்ட வேண்டிய பொறுப்பு ரயில்வே ஊழியருக்கு உள்ளது.
இந்தக் கடமையிலிருந்து ரயில்வே நிர்வாகம் தவறியுள்ளது. எனவே கொள்ளையடிக்கப்பட்ட பயணிக்கு நஷ்டஈடு அளிக்கவேண்டிய பொறுப்பு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்ளது.குத்துங்க எஜமா... குத்துங்க....
இது தொடர்பாக நுகர்வோர் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு செல்லும். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தனர். இனி நம் பொருட்களை கண்ட இடங்களில் போட்டுவிட்டு தூங்கலாம் ஜாலியா...
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment