2010/1/26 noor mohamed <noorm08@gmail.com>
இந்தியா என் நாடு....
பொதுவாக ரயில் பயணங்களே உற்சாகமளிப்பவை. ரயில் முன்னோக்கிச் செல்ல, நமது மனமோ மலரும் நினைவுகளில் சுகமாகப் பின்னோக்கிச் செல்லும், இப்படி ஒரே நேரத்தில் எதிரெதிரே பயணிப்பது மகிழ்ச்சியினை அதிகரிக்கும், மேலும் அப்போதே உருவாகும் சில நட்புகள் தொடர் நட்புகளாக உருவெடுப்பதும் உண்டு,இப்படியான ரயில் பயணங்களை தேசிய தினங்களின் போதும் பண்டிக்கைக்காலங்களின்போதும் பீதிக்குள்ளாக்குவதில் சமூக விரோதிகளும், ஊடகங்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. பொதுமக்கள் அனைவரும், தேசிய தினங்களையும், பண்டிகைக்காலங்களையும் நிம்மதியாக கொண்டாடுவது எந்நாளோ?!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மக்களாட்சியின் மாண்பினை கேலிக்கூத்தாக்கும் வகையில் இப்போதெல்லாம் இடைத்தேர்தல் திருவிழாக்கள் களைக்கட்ட துவங்கி விட்டன, சில காலம் முன்பு வரை சட்டமன்ற / மக்களவை உறுப்பினர் இறந்து விட்டாலோ அல்லது பதவி விலகிவிட்டாலோ தான் இடைத்தேர்தல் நடக்கும், ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழ்.
கட்சி மாறுவதை தடுக்கத்தான் கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தாங்கள் வகிக்கும் உறுப்பினர் பதவிகளினை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அதே உறுப்பினர்கள் புதிய கட்சியின் அடையாளத்துடன் இடைத்தேர்தலை சந்திக்கின்றனர். தேர்தல் செலவினங்கள் மட்டும் அப்பாவி அன்றாடங்காய்ச்சி முதல், அயல்நாட்டு இறக்குமதி காரில் பவனி வரும் அனைவரும் மீதும். ஒரே நபர் இரு இடங்களில் போட்டி இட்டு வெற்றி பெற்றதும் ஒரு இடத்தை ராஜினாமா செய்வார், மீண்டும் அங்கே அரங்கேறும் தேர்தல் கூத்து. இப்படி எத்தனையோ முரண்பாடுகள், தேர்தல் தொடர்பான சட்டங்கள் சீர்திருத்தப்படாமலேயே வைர விழா கொண்டாடுகிறது இந்திய தேர்தல் ஆணையம்.
முன்பெல்லாம், தேர்தல் தொடர்பாக கூறும்போது "டி.என்.சேஷன் பார்முலா" "கே.ஜே.ராவ் பார்முலா"என்று சொல்வதுண்டு, ஆனால் இப்போதோ, "திருமங்கலம் பார்முலா", "பென்னாகரம் பார்முலா" என்று புதியதொரு கண்டுப்பிடிப்பினை (?!) சொல்லி நம்மை வியக்க வைக்கின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தனது ஒரே இலக்கான "கரன்ஸி,கம்மல்-குவார்ட்டர் பார்முலா"- குறித்து கவலைப்பட்டு கொண்டு இருக்கிறான் (இந்திய) தமிழன்.
இலஞ்சம் வாங்குவதும், இலஞ்சம் கொடுப்பதும் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும், தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகவே ஆக்கப்பட்டு விட்டது . எங்கும் புரையோடியிருக்கும் இலஞ்சமே நாட்டை சீரழிப்பதில் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
அரசு அலுவலகங்களில் விரைவாக காரியம் முடிக்க அதிகாரிகள் இலஞ்சம் கேட்பது ஒரு புறம் இருக்க, சட்டவிதிகளின்படி 3 நாள் தேவைப்படும் ஒரு பணியினை, ஒரே நாளில் முடிக்க மக்களும் வள்ளலாக மாறி தாமே முன்வந்து இலஞ்சம் தருவதும் கொடுமை.
எனவே தாய்நாட்டுப் பற்றுள்ள நாம் ஒவ்வொருவரும், இலஞ்சம் குறித்து விழிப்புணர்வினை அனைவருக்கும் ஏற்படுத்திட வேண்டும். இலஞ்சம் எப்போது ஒழிகிறதோ அப்போது தான் மக்களாட்சியின் மாண்புகள் தழைத்தோங்கும்.
இந்தியா என் நாடு...!!!
Source: www.mypno.com
thankyou for all
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment