Friday, February 12, 2010

♥ : Re: இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

fantastic

On Feb 9, 9:18 am, m rajan <kmura...@gmail.com> wrote:
> பெறுநரைச்
> சென்றடையாமலேயே
> செல்லரித்துப்போன
> காதல் கடிதங்களை
> மனதிற்குள்ளேயே
> சுமக்கும்
> அனுப்புநர்களே
> மண்ணில் ஏராளம் !
> ***
> நிம்மதியில்லை
>
> என்றதும்
> கோவிலுக்குப்
> போகச்சொன்னான் நண்பன்!
> போனேன்
> முதன்முதலில்
> அவளைப் பார்த்த
> பேருந்து நிறுத்தத்திற்கு!
>
> ***
>
> உள்ளாடையைத்
> தேர்ந்தெடுக்கக்கூட
> இவ்வளவு நேரமா?
> நீயெல்லாம்
> பெண் பார்க்கப்போனால்...
>
> எத்தனை பெண்தான் பார்ப்பாயோ..
> என்பார்கள் நண்பர்கள்!
>
> அவர்களுக்கென்ன தெரியும்
> பார்த்த முதல் வினாடியே
> உன்னைத்
> தேர்வு செய்துவிட்டேன்
> என்பது!
>
> ***
>
> தெருவே
> முகம் சுழித்து
> மூக்கைப்
> பொத்துகிற வேளையிலும்
> நான் மட்டும்
> அருகினில் சென்று
> ரசித்துப் படிக்கிறேன்
> உன் பெயரை
> குப்பை லாரியில்!
>
> ***
>
> அருவி
> மலைக் காதலிக்கு
> மழைக் காதலன்
> சூட்டிய
> மல்லிகை !
> ***
> அவள் எனக்கு பிடிக்கவில்லை !
> எத்தனை
> பெண் பார்க்கும் படலம்
> என்னவளுக்கு ...
> விரைவில்
> வீட்டில்
> சொல்லியாக வேண்டும்!
> உன்னை
> பார்த்துவிட்டுச் சென்ற
> எல்லோரும்
> "அவள் எனக்கு பிடிக்கவில்லை"
> என்றுதான்
> சொல்லியிருக்கிறார்கள் ...
> ஆமாம்...
> யாருக்குமே
> பிடிக்காத உன்னை
> எனக்கு மட்டும்
> எப்படி பிடித்துப் போனது?
> ஓ..
> இதுதான்
> காதலோ !!!
> ***
> BY YOURS RAJAN[?]
>
>  B0C.gif
> < 1KViewDownload

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment