Monday, February 15, 2010

♥ : அழகா... ரொம்ப அழகா?

`நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!' என்று பெண்களிடம் ஒரு பொய் சொன்னால் போதும் எந்தக் காரியத்தையும் சாதாரணமாக சமாளித்துவிடலாம். ``முக  அழகு மட்டும்தான் அழகா? அக அழகு அழகில்லையா?'' .. அக அழகை வளர்த்துக்கொள்ள பளிச் டிப்ஸ்கள் இதோ.

புத்திசாலித்தனம்!

இந்த அம்சம் ஒரு பெரிய சொத்துங்கிறதை நிறையப் பெண்கள் மறந்துடுறாங்க. தன்னை ஒரு மக்குப் பெண்ணாக காட்டிக் கொள்ளத்தான் ரொம்ப மெனக் கெடுறாங்க. இதை தான் ஆண்கள் விரும்புவாங்கன்னு தப்புக் கணக்கும் போடுறாங்க. உண்மையில ஆண்களுக்கு புத்திசாலித்தனமான பெண்ணைத்தான் பிடிக்கும். காலப்போக்கில் அழகு போனாலும் அவளை ரசிக்க வைப்பது அவகிட்ட இருக்கிற புத்திசாலித்தனம்தான்.

ஸ்மைல் ப்ளீஸ்!

அழகா சிரிக்கிற பெண் இன்னும் ரொம்ப அழகா தெரிவாள். அதுவும் அந்தச் சிரிப்பு கண்களில் இருக்கணும். உதடு சரியில்லைனாலோ, பற்கள் கோணலாக இருக்குன்னோ தயங்காதீங்க.  கண்களால அழகா சிரிக்கும்போது பார்க்கிறவங்களுக்கு முகத்துல இருக்கிற எந்தக் குறையும் தெரியாது. ஒருத்தருக்கு உங்க புன்னகையைப் பார்த்து பதிலுக்கு சிரிக்கணும்னு தோணிச்சுன்னா அதுதான் உண்மையான புன்னகை. ஸோ... ஸ்மைல் ப்ளீஸ்!

நீங்க இப்படியா?

இரக்கம்... இந்தக் குணம் இல்லாத பெண்களே இருக்க முடியாது. என்னை பொறுத்த வரைக்கும் மன்னிக்கத் தெரிஞ்ச எல்லாப் பெண்களுமே இரக்கமுடையவள்தான்.

நோ... பயம்!

பயம் இல்லாமல் இருப்பதைவிட ஒரு காரியத்தைச் செய்து முடிக்கத் தேவைப்படும் துணிச்சல்தான் தைரியம். பொதுவா பெண்களைப் பார்த்தால் தைரியசாலிகளாகத் தெரிய மாட்டாங்க. அவங்க உடல்வாகு அப்படி, ஆனால் மனசளவுல அவங்ககிட்ட இருக்கிற துணிச்சலும், மன உறுதியும் நிறைய ஆண்களிடம் கூட இருக்காது.

போய்ஸ்கிட்ட...

ஆண்கள்கிட்ட நாம எப்படிப் பழகறோம்? இது ரொம்ப முக்கியம். சில ஆண்களிடம் நட்பாக பழகணும்னு தோணும், சிலர் பாய் ஃபிரெண்ட், ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணும், சிலருடன் சும்மா வெளியில சுற்ற மட்டும் பிடிக்கும். முதல்ல ஒரு ஆணிடம் எந்த மாதிரி ரிலேஷன்ஷிப் ஏற்படுத்தப் போறோம்னு தெளிவா முடிவு பண்ணிட்டு, அதுக்கப்புறம் அவங்களிடம் பழக ஆரம்பிக்கணும். முதலில் அந்த உறவுமுறை அவங்களுக்கும் தெளிவா புரியவைச்சுடும்க. ஆண்களிடம் ரொம்ப சகஜமா ஃபிரெண்ட்லியா பழகுற நிறையப் பெண்களைப் பார்த்திருக்கேன். இன்றைய டிரெண்ட் பெண்களின் ஸ்டைலே இதுதான்!

இது அவசியம்!

திறமைசாலிகள் எல்லாருமே அழகா இருப்பதில்லை, அவங் களுடைய திறமையால நமக்கு அழகா தெரியுறாங்க. அவ்வளவுதான்!

அப்போ... புற அழகு தேவையில்லையான்னு நினைக்கலாம். அந்த அழகோடு இந்த அக அழகும் சேர்ந்துச்சுன்னா ரொம்ப அழகா இருப்பீங்க! BY YOURS

                                                           RAJAN.


--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment