கண்ணில் படுகின்ற சில சம்பவங்கள் சிலவேளைகளில் நம்ம மூளையை போட்டு பிசைந்தெடுக்கும் , அதேவேளை ஆஹா இப்படியும் நடந்திருக்கா! என்று நம்மை வாயில் விரலைவைக்கும் அளவுக்கு இருக்கும் அப்படியான விசயமொன்று அண்மையில் அறிந்துகொள்ள கூடியதாக இருந்தது அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன் .
இருவருக்கிடையில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பாசனை ....
காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பெரியவர் ஒருவர் பெட்ரோல் நிரப்பு(பெட்ரோல் பங்க் ) நிலையத்திற்கு சென்று ,500 ரூபாய் நோட்டை கொடுத்து அங்கேயிருந்த பையனிடம் பெட்ரோல் நிரப்பும்படி சொல்லியிருக்கிறார் அதற்கு அந்த பையன் ,
"ஐயா இப்பொழுதெல்லாம் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில்இருப்பதால் 500 ரூபா நோட்டுக்களில் கையெழுத்துவாங்கிகொள்கிறோம் எனவே உங்கள் கையெழுத்தையும்போட்டு கொடுங்கள் " என்று சொல்லியிருக்கிறான் .
வந்தவரும் கொஞ்சம் கூட தயங்காமல் தனது கையெழுத்தை போட்டு கொடுத்திருக்கிறார் கையெழுத்தை பார்த்த பையன்
"ஐயா நான் , உங்கள் கையெழுத்தை போட சொன்னால் நீங்கள்நோட்டிலுள்ள கையெழுத்து மாதிரி போட்டிருக்கீங்களே !"என்றிருக்கிறான் .
அதற்கு அந்த பெரியவர் சிரித்தபடியே ....
" தம்பி அந்த நோட்டில் இருக்கும் கையெழுத்தும்என்னுடையதுதான்,
ஏன்னா நான் இப்போ ரிசேர்வ் பேங்க் கவர்னராக இருப்பதால்நோட்டுகளில் என்னுடைய கையெழுத்து இடம்பிடித்திருக்கிறது" என்றபடியே பொறுப்பாக பதில் சொன்ன படி நகர்ந்திருக்கிறார் அந்த பெரியவர் .
இந்த அனுபவத்திற்கு சொந்தகாரர் வேறு யாருமல்ல இந்தியா ரிசேர்வ் பேங்க் கவர்னர் H.V.R.ஐயங்கார் .
பாத்தீங்களா எவ்வளவு பொறுப்பு வாய்ந்தவர்களேல்லாம் இந்த உலகில் இருக்கிறார்கள்.
BY YOURS RAJAN
-- KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment