மீண்டும்...மீண்டும்...காதலோடு...

அது உலகத்தின் இறுதி நாள்
கலகத்தால் உலகம் அழிந்து விடுகிறது
கடைசி மனிதனின்
கடைசி மூச்சுக் காற்றில் கலந்து
எல்லாமுமாய் இருந்தது
எதுவுமில்லாமல் போய்விட்டது
சூன்யம் சூழ்ந்து கொள்கிறது
எங்கெங்கு காணினும் வெறுமை
காலங்கள் கணக்கின்றி கடக்கின்றன
வெறுமையில் வெறுப்படைந்த
இந்தப் பிரபஞ்ச நாயகன்
மீண்டும் தன் படைப்புத்
தொழிலைத் தொடங்க எண்ணி
தன் உயிர்க் காற்றை ஊதுகிறான்
உயிரினங்கள் உயிர்ப்பித்து
இரண்டிரண்டாய் பல்கிப் பரவுகின்றன
முதல் மனிதன் மட்டும் இறுதியாக
தனியாகப் படைக்கப்படுகிறான்
அவனுக்கு முன் இளமை மாறாத
அழகிய தேவதைகள் அணிவகுக்கப் பட்டு
இவர்களில் யாரை வேண்டுமானாலும்
நீ துணையாக்கிக் கொள்ளலாம்
என்று சொல்லப் படுகிறது
ஒருவர் பின் ஒருவராக
அனைவருடைய விழிகளையும்
மனதையும் பார்த்து விட்டு
"காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை" என்று
மூலப்பொருளிடம் முதல் மனிதன் கூறுகிறான்
ஆச்சர்யமடைந்த ஆதிசக்தி
தனக்குள் நினைத்துக் கொள்கிறது
"மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?"
வேறு வழியின்றி அவனிடமிருந்தே
அவனுக்கான துணையை படைத்து
காதல் காற்றை இருவர் இதயத்திலும்
நிரப்பி பூமிக்கு அனுப்பிவிட்டு...
இனியொரு முறை இவ்வுலகத்தை
அழிக்கவேண்டியிருக்காது என்று
காலத்தைப் படைத்தவன்
காலப் புத்தகத்தில் தீர்ப்பெழுதி
கையெழுத்திடுகிறான் காதலோடு.........
--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய் இருப்பேன்.
இந்தியனாய் இறப்பேன்.
ராஜன்.
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment