Wednesday, December 23, 2009

Re: ♥ : அன் அவைலபிள்...........

Hai Mr. Felix, I am working in the Ministry of Railways.  i want to clear ur doubts. 1) Authorised Agents are allotted some Berths in important trains. They have bulk booking and they pay for the Railways.2). On a particular day and a time hundred of people click the same site for tkt booking.  Depending upon the speed of ur NET connection and RAM speed u will be connected to IRCTC site.  Yurs, parimalam

2009/12/21 Kittu Muthu <puli.amr@gmail.com>
ithu ov  oru indian udaiya thalai vithi itha maatha mudiyathuu,

21-12-09 அன்று, Stalin Felix <stalinfelixm@gmail.com> எழுதினார்:

அன் அவைலபிள்............



 

 
கடல், யானை, ரயில் - எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத வியங்களாக நாம் குறிப்பிடுவது இந்த மூன்றையும் தான். முன் இரண்டையும் விட பாரதத்தில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வியலோடு கலந்து இருக்கிறது ரயில். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வியங்களில் ரயில்வே துறையும் ஒன்று.பல உலக நாடுகளின் அளவுக்கு அதனுடைய வளர்ச்சி இல்லாமல் இருந்தாலும், 1.4 மில்லியன் ஊழியர்களை கொண்டது இந்திய ரயில்வே துறை. இங்கே சுமார் 20 மில்லியன் மக்கள் ரெயிலை தினமும் போக்குவரத்திற்காக பயன் படுத்துகிறார்கள்.

கடந்த நவம்பர் 11 முதல் 20 வரை மட்டும் ரயில்வே துறையின் வருவாய் சுமார் 2100 கோடி ரூபாய். சில மாதங்களுக்கு முன் இந்த பணம் கொழிக்கும் துறையை கைப்பற்ற இரு மாநில கட்சிகள் குடுமி பிடி சண்டை போட்டது நாடறிந்த விஷயம்.

எந்த ஒரு துறையும் மாறி வரும் தொழில் நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்ப ஈடு கொடுக்க முடிந்தால் மட்டுமே அசுரத்தனமான வளர்ச்சியை பெற முடியும். உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகையை கொண்ட நாட்டின் தேவைக்கு ஏற்ப ரயில்கள் இருகிறனவா என கேள்வி எழுப்பினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதன் தரம் பயணிகளின் முகத்தை சுளிக்க வைப்பதாகவே உள்ளது. கேண்டீனில் இருந்து கழிவறை வரை ரயில்வே துறையுனரின் சேவை குறைபாடுகள் அப்பட்டமாய் தெரிகிறது.

கேரளாவில் பணி புரியும் குடும்ப நண்பர் ஒருவர் என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இரண்டு நாட்களில் திரும்பி செல்ல வேண்டி இருந்ததால், ஆன்லைனில் தக்கால் டிக்கெட் ஒன்றை முன் பதிவு செய்ய சொன்னார். எளிதான காரியம் தானே என காலையிலேயே ரயில்வேயின் ஆன்லைன் புக்கிங் தளமான http://www.irctc.co.in இல் லாகின் செய்து விட்டு 8 மணி ஆகட்டும் என காத்திருந்தேன்.

அதுவரை ஒழுங்காய் வேலை செய்து வந்த இணையதளம் 8:00 மணி ஆனதும் முடக்கப்பட்டது. சுமார் 100 முறை திறந்து, மூடியும் வெவ்வேறு ப்ரௌசெர்களை உபயோகித்தும் ம்ம்... ஹும். 'சர்விஸ் அன் அவைலபிள்' என்ற செய்தி மட்டும் ஒரே அடியாய் மின்னி கொண்டு இருந்தது.


நீண்ட முயற்சிக்கு பின் சுமார் 8:30மணிக்கு இணையதளத்தில் உட் புக முடிந்தது. எல்லா விவரங்களையும் கொடுத்து ரயில் முன் பதிவு நிலவரத்தை பார்த்த போது அதிர்ந்து விட்டேன். ஆம் எல்லா இருகைகளும் முன் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து அந்த ரயிலில் முன் பதிவு செய்ய முடியாத படி தடை செய்யப்பட்டு இருந்தது.

மிகுந்த குழப்பத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன் என்று தான் சொல்ல வேண்டும். பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி மட்டும் என்னையே சுற்றி சுற்றி வந்தது... "என்னை போல் தானே மற்றவர்களுக்கும் 'சர்விஸ் அன் அவைலபிள்' என்ற செய்தி வந்திருக்கும், அப்படி இருக்கும் போது எப்படி அரை மணி நேரத்தில் ரயிலின் அத்தனை இருக்கைகளும், முன் பதிவு செய்யப்பட்டிருக்கும்". ஆனால் இந்த விபரங்களை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ள ???.. ம்ம்.. ஹூம்...பண்டிகை நேரம் ஆனதால் கேரளா செல்லும் அனைத்து பேருந்து இருக்கைகளும் முன் பதிவு செய்யப்பட்டு விட்டது. இனி கேரளா செல்ல வேண்டுமானால் ரயிலில் முன்பதிவு செய்யாமல் தான் செல்ல வேண்டும் என முடிவு எடுத்து இரண்டு நாட்கள் காத்திருந்தோம்.

நண்பர் கிளம்பும் அன்று வெகு சீக்கிரமாகவே ரயில்வே நிலையம் சென்று, முன் பதிவு செய்யாத பயண சீட்டு வாங்கி விட்டு ரயில் நடை மேடைக்கு வரும் வரை காத்திருந்தோம். எதோச்சையாய் என் கல்லூரி தோழன் ஒருவன் வர, அவனும் என் நண்பர் செல்லும் அதே ரயிலை பிடிக்க தான் வந்திருக்கிறார் என தெரிந்தது. ரயில் டிக்கெட்டை எப்படி முன் பதிவு செய்ய முடிந்தது என அப்பாவித்தனமாகவும், ஆச்சரியத்துடனும் கேட்டேன். அவன் ஒரு மென் சிரிப்பை உதிர்த்து விட்டு சொன்னான் ' தான் எஜன்ட் வழியாக டிக்கெட் முன் பதிவு செய்ததாகவும், எப்போதும் அவ்வாறே செய்வதாகவும் அதனால் தான் தன்னுடைய பயணங்கள் எப்போதுமே தடங்கல் இல்லாமல் செல்வதாகவும் கூறினான். அவனுடைய பயண சீட்டை வாங்கி பார்த்தேன் உண்மை தான், ஏறக்குறைய நாங்கள் முன் பதிவு செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த அதே நேரம் அவனுடைய பயண சீட்டு முன் பதிவு செய்ய பட்டிருந்தது....ரயில் கட்டணத்தை விட ஏறக்குறைய 150 ரூபாய் அதிகமாக கொடுத்திருக்கிறான்.

பெரும் கோபமும் வருத்தமும் கொண்டேன். முன்பதிவு என்பது இரு பிரிவினருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் ஏஜண்டுகள் எனப்படும் தனி முதலாளிகள் வளர மற்ற சாமானியர்கள் சுரண்டப்படுவது தான் வேதனை. இப்படி முதலாளித்துவத்தின் அடிவருடியாய் இருக்கும் நிலையை களைய அரசாங்கம் என்ன செய்ய போகிறது என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்

--
--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in



--
இப்படிக்கு,
அம்மாசி முத்து ராம்.
மருதங்கநால்லூர்,
(இ) சிங்கப்பூர்.

வீழ்வது நாமாக இருப்பினும்....வாழ்வது தமிழாக இருக்கட்டும்......
    
  
  
  

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in

No comments:

Post a Comment