Sunday, December 20, 2009

Re: ♥ : நண்பர்களே தெலுங்கானா பிரிவை தாங்கள் ஆதரிக்கிறீர்களா ... ?

vendame

2009/12/20 ganga raj <gangai79@gmail.com>:
> உண்மைதான்
>  ஈழ அமைதிக்காக உலகமெங்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள் மன்மோகன் சிங்
> கிற்கு தந்தி அனுப்பினோம்
> ஒபாமா வுக்கு மின் மடல் அனுப்பினோம்
> அனைத்து கட்சிகளும், அனைத்து மக்களும் இணைத்தும
> தனித்தும்
> மனித சங்கிலி போராட்டம் ,
> சாலை மறியல் ,
> பேரணி ,
> பொது கூட்டம் , இதை யும் தாண்டி 32 க்கும் மேற்பட்ட தமிழர்கள்
> தீக்குளித்தார்கள்
> தீகுளித்த எம் மக்கள் .
> உலகதமிழர்கலெல்லாம் கதறி அழ ஒண்ணரை இலட்ச மக்களை கொன்று மூன்று இலட்ச மக்கள்
> வதை கூடங்களில் அடைக்கபட்டு நாள் தோறும் இளையர்களை பிரித்து கொல்லும் போதும்
> நம்மால் அமைதியாக இந்திய இலங்கை கிரிகெட் பார்த்து கொண்டு  இருக்க முடிந்தது
> ஆனால் தெலுங்கனா ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்கும் அமைதி காக்க
> தெரியவில்லை
>
> 2009/12/20 rajan s <rajan.7605@gmail.com>
>>
>> எதற்குமே வன்முறை தீர்வாக அமையாது.  அது ஒரு அமைதியற்ற வாழ்கைக்கு ஆரம்பமாக
>> இருக்கும்.
>>
>> 2009/12/16 ganga raj <chithradigital@gmail.com>
>>>
>>> இந்தியாவில் மாநிலங்கள் உருவான வரலாறு
>>>
>>> கடந்த 1947ல் நாடு சுதந்திரம் பெற்றபோது, 500க்கும் மேற்பட்ட குறுநில
>>> மன்னர்கள் நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களையும் எல்லாம் சுதந்திர
>>> இந்தியாவில் ஒருங்கிணைக்க பாடுபட்டு வெற்றி பெற்றவர் இரும்பு மனிதர் சர்தார்
>>> வல்லபாய் படேல். அதே நேரத்தில் நாட்டில் முதல் மாநில பிரிவினைக்கு காரணமாக
>>> இருந்தவர் பொட்டி ஸ்ரீராமுலு. மாஜி ரயில்வே ஊழியரான ஸ்ரீராமுலு சென்னையில்
>>> காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கை, அப்போதைய மதராஸ்
>>> மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள பகுதிகளை பிரிக்க வேண்டும்
>>> என்பதாகும். அப்போது, கோரிக்கைக்கு மத்திய அரசு அடிபணிந்து மதராஸ் மாகாணத்தில்
>>> தெலுங்கு பேசுவோர் இருந்த பகுதிகளை பிரித்து ஆந்திரா மாநிலத்தை உருவாக்கியது.
>>> சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டி வரும்
>>> என்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களால் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால்,
>>> ஆங்கிலேயர் அமைத்த மாகாணங்கள் இருந்தாலும், பெரும்பா லான இடங்களில்
>>> மொழிவாரியாகத்தான் காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுதந்திரம்
>>> பெற்றதுமே, மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
>>> என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க நேரு
>>> எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியா
>>> பாதிக்கப்பட்டி ருக்கும் நேரத்தில் மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தால் நாட்டின்
>>> ஸ்திரதன்மை பாதிக்கப்படும் என்று நேரு கருதினார். வல்லபாய் படேலும் நேருவின்
>>> கருத்தை ஆதரித்தார். ஆனால், மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்ற போராட்டம்
>>> நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அந்த போராட்டங்களுக்கு மக்களின் ஆதரவு
>>> பெருகுவதை நேருவால் தடுக்க முடியவில்லை. கன்னடம், மராட்டி, மலையாளம், குஜராத்தி
>>> பேசுவோர் தனிமாநிலங்கள் கேட்டு போராடியபோதும், விசால ஆந்திரா கேட்டு தெலுங்கு
>>> மொழி பேசுபவர்கள் நடத்தி போராட்டம் வேகமாக நடந்தது.
>>>
>>>
>>> 1952ல் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற நேருவை தெலுங்கு பேசுபவர்கள்
>>> முற்றுகையிட்டனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நேரு, ஒரு சில மொழிவாரி
>>> மாநிலங்கள் அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனாலும், அதற்கான நேரம் இதுவல்ல
>>> என்றும் கூறினார். இதை தொடர்ந்து, சென்னையில் ஸ்ரீராமுலு காலவரையற்ற
>>> உண்ணாவிரதம் இருந்தார். 56 நாட்களுக்கு பின் அவர் இறந்ததும், வன்முறை
>>> வெடித்தது. ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, 1952ம்
>>> ஆண்டு டிசம்பரில் ஆந்திரா தனி மாநிலம் உருவாக்கப்படுவதாக நேரு அறிவித்தார்.
>>> இதைத் தொடர்ந்து மற்ற மொழி பேசுபவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மாநிலங்கள்
>>> மறுசீரமைப்பு கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷனின் பரிந்துரை அடிப்படையில், 1956ல்
>>> 14 புதிய மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. ஏற்கனவே
>>> மதராஸ் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஆந்திராவும், ஐதராபாத் மாநிலமும்
>>> இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவானது.
>>>
>>>
>>> இதைத் தொடர்ந்து 1960ல், பம்பாய் மாகாணம் பிரிக்கப்பட்டது. மராத்தி
>>> பேசுபவர்கள் இருந்த பகுதி மகாராஷ்டிரா என்றும், குஜராத்தி பேசுபவர்கள் வசித்த
>>> பகுதிகள் குஜராத் என்றும் பெயரிடப்பட்டு தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
>>> அசாமில் இருந்து நாகா இன மக்கள் வாழ்ந்த பகுதிகள் பிரிக்கப்பட்டு நாகாலாந்து
>>> உருவானது. 1966ல் பஞ்சாப் மாநிலம் மூன்றாக பிரிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில்
>>> இருந்து அரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புதிதாக பிறந்தன. இதைத்
>>> தொடர்ந்து 1972ல் வடகிழக்கு பகுதியில் மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய
>>> மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
>>>
>>>
>>> நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2000ம் ஆண்டில் ஜார்கண்ட், சட்டீஸ்கர்,
>>> உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது, சந்திரசேகர் ராவ்
>>> உண்ணாவிரதத்தை தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலை, தெலுங்கானா தனி
>>> மாநிலம் அமைய வழிகண்டுள்ளது. கடந்த 1956ல் ஆந்திரா மாநிலத்தோடு, ஐதராபாத்
>>> மாநிலம் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது. இப்போது, பழைய ஐதராபாத்
>>> மாநிலத்தின் பெரும்பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட உள்ளது.
>>> வரலாறு திரும்புகிறது.
>>>
>>>
>>>  abulbazar  :  நன்றி
>>>
>>>
>>> மொழிவழி தேசியத்தையும்
>>> தாண்டிய தெலங்கானா
>>>
>>> ''ஒட்டு மொத்த ஆந்திராவின் மக்கள் தொகையில் நான்கு சதவிகிதம் மட்டுமே
>>> கொண்ட ரெட்டிகளும், சவுத்ரிகளும் வளமான தெலங்கானா பகுதிகளில்
>>> அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டார்கள். அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த
>>> தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அடிமையாக்கப்பட்டனர். இந்த
>>> ஆதிக்கத்தை எதிர்த்து தான் நாங்கள் பிரச்சாரம் ஆரம்பித்தோம்.''
>>>
>>> ------------------- புரட்சிப் பாடகர் கத்தார்
>>>
>>> இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓர் பகுதியாக இருந்த தெலங்கானா
>>> இன்று புதிய மாநிலமாக உருவெடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
>>>
>>> வரலாற்றுத்துவம் மிக்க இந்த அறிவிப்பை அடுத்து தெலங்கானா பகுதி மக்கள்
>>> மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.தனி மாநிலமாக தெலங்கானா உருவெடுக்க அது
>>> சந்தித்த பிரச்சினைகள் ஏராளம்.-அது பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை:-
>>>
>>> தெலங்கானா- இங்குதான் தெலுங்கு மொழி பிறந்ததாகக் கருதப்படுகிறது.முன்னர்
>>> அய்தராபாத் நிசாம் ஆட்சியின் கீழிருந்த தெலுங்கு பேசும் பகுதிகளை
>>> உள்ளடக்கியது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில்
>>> அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திராவின் மாவட்டங்களான வாரங்கல்,
>>> அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர்,
>>> நிசாமாபாத்,மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் அய்தராபாத்தும்
>>> அடங்கும்.கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து
>>> கிழக்காகப் பாய்கின்றன. 14ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முதலில் தில்லி
>>> சுல்தான்கள் ஆட்சியிலும் பின்னர் பாமனி,குதுப் சாஹி மற்றும் முகலாயப்
>>> பேரரசு ஆட்சிகளின் கீழ் இருந்தது. 18ஆம் நூற்றாண்டு துவக்கத்தில்
>>> மொகலாயப்பேரரசின் அழிவின்போது அசஃப்ஜாஹி அரசவம்சம் தனியான அய்தராபாத்
>>> நாட்டை நிறுவியது. பின்னர் ஆங்கிலேய அரசுடன் உடன்படிக்கை செய்துகொண்டு
>>> இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் கூடுதல் மக்கள்தொகை கொண்ட
>>> சமஸ்தானமாகவும் இது விளங்கியது.தெலங்கானா எப்போதும் ஆங்கிலேய அரசின்
>>> நேரடி ஆட்சியில் இருந்ததில்லை.
>>>
>>> 1947 ஆம் ஆண்டு இந்தியா ஆங்கிலேயே அரசிடமிருந்து விடுதலை பெற்றது.ஆனால்
>>> அய்தராபாத்தின் நிசாம் தமது தன்னாட்சியை தொடர விரும்பினார். புதிதாக
>>> அமைந்த இந்திய அரசு 17.9.1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கை
>>> மூலம் அய்தராபாத் நாட்டை கைப்பற்றிக் கொண்டது
>>>
>>> கம்யூனிஸ்ட்கள் தலைமையில் 'தெலங்கானா புரட்சி' என அறியப்படும் விவசாயிகள்
>>> போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951வரை தொடர்ந்தது.
>>>
>>> இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில்
>>> பரவியிருந்தனர். இவற்றில் 9 மாவட்டங்கள் நிசாம் ஆட்சியின் கீழிருந்த
>>> அய்தராபாத் சமஸ்தானத்திலும், 12 சென்னை மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்ச்
>>> காலனி ஏனாமிலும் இருந்தன. பொட்டி சிறீராமுலு என்றவரின் போராட்டத்தின்
>>> விளைவாக சென்னை மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு,
>>> கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.
>>>
>>> டிசம்பர் 1953 இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள்
>>> ஆணையத்தை ஏற்படுத்தினார். உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த்
>>> மேற்பார்வையில் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம்
>>> தெலங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும்
>>> மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க
>>> இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில்
>>> குறிப்பிட்டிருந்தது.அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலங்கானா மக்களின்
>>> கவலைகளைக் கருத்தில்கொண்டு அய்தராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக
>>> வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் அய்தராபாத் மாநில
>>> மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என
>>> தெரிவித்திருந்தது.
>>>
>>> ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும்
>>> இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர்1, 1956இல்
>>> நிறுவியது.இருப்பினும் தெலங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி
>>> மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு,நிதி பகிர்வுகளை உறுதி செய்யும்
>>> உடன்பாடு ஒன்றை அளித்தது.
>>>
>>> 1956ஆம் ஆண்டின் உடன்பாட்டின்படி தெலங்கானாவிற்கு உரிய பகிர்வுகள்,
>>> உரிமைகள் மற்றும் சலுகைகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள்
>>> 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து
>>> இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். சனவரி 1969இல்
>>> ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவாக
>>> பரவி தெலங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும்
>>> எதிர்க்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர்.இந்த
>>> இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள்
>>> உயிரிழந்தனர்.
>>>
>>> ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய
>>> காங்கிரஸ் தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலங்கானா பிரஜா சமிதி
>>> என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற
>>> போதும் செப்டம்பர் 1971இல் தமது கொள்கைகளைக் கைவிட்டு இவர்கள்
>>> காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை
>>> ஏற்படுத்தியது.[
>>>
>>> 1990 களில் பாரதிய ஜனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலங்கானா
>>> பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான
>>> 'தெலுங்குத் தேசம்' கட்சியினால் அதனைக் கைவிட்டதாகக் கூறிவிட்டது.
>>> காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலங்கானா மாநிலத்தை
>>> ஆதரித்து தெலங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர்.அதே
>>> நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலங்கானா
>>> ராஷ்ட்ர சமிதிஎன்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
>>> துவக்கினார். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும்
>>> சந்திரசேகரராவ் கட்சியும், (டி.ஆர்.எஸ்) கூட்டணி அமைத்து தனி தெலங்கானா
>>> காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின.மத்திய அரசின்
>>> பொது குறைந்தபட்ச திட்டத்திலும் தெலங்கானா மாநிலம் அமைப்பது இடம்
>>> பெற்றிருந்தது.-அவ்வுறுதியின் அடிப்படையில் டி.ஆர்.எஸ். கூட்டணி அரசில்
>>> பங்கேற்றது.
>>>
>>> இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் டி.ஆர்.எஸ்.
>>> கூட்டணியிலிருந்து விலகியது. காங்கிரசு அரசிற்கு தெலங்கானா மாநிலம்
>>> அமைக்க அழுத்தம் கூடியது.-மார்ச் 2008இல் அனைத்து டி.ஆர்.எஸ்.சட்டமன்ற
>>> மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி
>>> இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர். ஆனால் இந்த இடைத்தேர்தல்களில்
>>> டி.ஆர்.எஸ். தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் 7-அய்யும் 4 நாடாளுமன்ற
>>> தொகுதிகளில் 2 அய் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. இதனிடையே
>>> தெலங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற
>>> துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலங்கானா பிரஜா கட்சியை
>>> துவக்கினார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல்
>>> வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும்
>>> தெலங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.
>>>
>>> நவ தெலங்கானா பிரஜா கட்சி நவம்பர் 2,2008இல் தெலங்கானாவை தனி மாநிலமாக
>>> அறிவித்து அடங்கியுள்ள 10 மாவட்டங்களைக் குறிக்கும் விதமாக பத்து
>>> வெண்புறாக்களை பறக்க விட்டார்.
>>>
>>> 2009 பொதுத் தேர்தல்களின் போது டி.ஆர்.எஸ். மற்ற எதிர்கட்சிகளுடன்
>>> கூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர்.
>>>
>>> புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய 'பிரஜா ராஜ்யம்' கட்சியும்
>>> தெலங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர்.நவ தெலங்கானா கட்சி சிரஞ்சீவியுடன்
>>> இணைந்தனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே
>>> இருந்தன;மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது.முதலமைச்சர்
>>> ராஜசேகர ரெட்டி தனித் தெலங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
>>>
>>> டிசம்பர் 29, 2009 முதல் டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் தனித்
>>> தெலங்கானா கோரிக்கைக்காக சாகும்வரை பட்டினிப் போராட்டம்
>>> துவக்கினார்.அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து
>>> கடையடைப்புகளும் வன்முறையும் வெடித்தது.20 க்கும் மேற்பட்டோர்
>>> தீக்குளித்தனர்.மாணவர்களின் கொந்தளிப்பு கொழுந்து விட்டு எரிந்தது. கடந்த
>>> 11 நாளும் தெலுங்கானா பகுதியே பற்றி எரிந்தது. சந்திரசேரராவின் உடல் நிலை
>>> மோசமடைய சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலையும் அபாயம் ஏற்பட்டது.இதனை
>>> அடுத்து மத்திய அரசு அவசர அவசரமாக 9.12.2009 இரவு கூடியது (அன்றே மூன்று
>>> முறை கூடினர்) தனித் தெலங்கானாவுக்கு ஒப்புதல் அளிப்பதாக மத்திய உள்துறை
>>> அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
>>>
>>> ஆந்திர மாநில சட்டப் பேரவையில் தனித் தெலங்கானாவ ஆதரித்து தீர்மானம்
>>> நிறைவேற்றுமாறு மத்திய அரசு கூறியது.
>>>
>>> இதற்கிடையே தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கு ஆந்திர மாநில சட்டப்
>>> பேரவை உறுப்பினர்கள் 105 பேர் (காங்கிரஸ், தெலுங்குதேசம், பிரஜா
>>> ராஜ்ஜியம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்) ராஜினாமாவை அறிவித்து விட்டனர். 4
>>> நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலகல் கடிதம் கொடுத்துள்ளனர். ஆந்திர மாநில
>>> மேலவை உறுப்பினர்களும் (காங்கிரஸ் 34, தெலுங்குதேசம் 120) பதவி
>>> விலகியுள்ளனர்.
>>>
>>> ஒரு திருப்பம் ஏற்பட்ட ஒரு சில நேரங்களிலேயே வேறு ஒரு மய்யப் புள்ளியை
>>> இப்பிரச்சினை எட்டியுள்ளது. தனி தெலங்கானா என்பது ஓர் உரிமைப் போராட்டம்.
>>> புரட்சிப் பாடகர் கத்தார் தெரிவித்துள்ளதுபோல இது 68 ஆண்டு காலப்
>>> போராட்டமாகும். மூன்றரைக்கோடி மக்களுக்கான போராட்டமாகும்.
>>>
>>> ''ஒட்டு மொத்த ஆந்திராவின் மக்கள் தொகையில் நான்கு சதவிகிதம் மட்டுமே
>>> கொண்ட ரெட்டிகளும், சவுத்ரிகளும் வளமான தெலங்கானா பகுதிகளில்
>>> அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டார்கள். அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த
>>> தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அடிமையாக்கப்பட்டனர். இந்த
>>> ஆதிக்கத்தை எதிர்த்து தான் நாங்கள் பிரச்சாரம்
>>> ஆரம்பித்தோம்." ('நக்கீரன்' பேட்டி 12.12.2009 பக்கம் 6) என்று ஆந்திர
>>> மாநிலப் புரட்சிப் பாடகர் கத்தாரின் கருத்து மிகவும்
>>> கவனிக்கத்தக்கதாகும்.
>>>
>>> தெலங்கானா போராட்டம் சில குறிப்பிட்ட உணர்வுகளை, உண்மை-களை
>>> வெளிப்படுத்தக் கூடியதாகும்.
>>>
>>> திராவிடத் தேசியம் பழுதானது; மொழி வழித் தேசியம் பிரதானமானது என்று கூறி
>>> வருபவர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.
>>>
>>> ஆந்திர மாநிலத்திலும் சரி, தெலங்கானாவிலும் சரி தாய்மொழி தெலுங்குதான்.
>>> என்றாலும் மொழி வழி தேசியத்தின் அடிப்படையில் அவர்கள் ஒன்றுபடத் தயாராக
>>> யில்லை.
>>>
>>> ஒரே மொழி பேசினாலும் தாங்கள் ஒடுக்கப்பட்டால், உரிமைகள் நசுக்கப்பட்டால்
>>> பொங்கி எழுந்து தனி மாநிலம் கோருவார்கள் என்பதற்கு தனித் தெலங்கானா
>>> போராட்டம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
>>>
>>> மத அடிப்படையில் பாகிஸ்தானும், வங்காளதேசமும் ஒன்றுதான் என்றாலும்,
>>> தாங்கள் ஒதுக்கப்படுகிறோம், உரிமைகள் மறுக்கப்படுகிறோம் என்று உணர்ந்த
>>> நேரத்தில் வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்தது என்பதும்
>>> கவனிக்கத்தக்கதாகும்.
>>>
>>> மதத்தையும் தாண்டியது ஒடுக்குமுறையாகும்.
>>>
>>> ஒரு மாநிலத்தையே இந்திய அரசு பாரா முகத்துடன் நடத்துகிறது;
>>> புறக்கணிக்கிறது என்று அம்மாநில மக்கள் கருதினால் வேறு வகையாகக் கூட
>>> சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்திய
>>> அரசு கவனிக்கத் தவறக் கூடாது.
>>>
>>> இலங்கையில் நடந்தது - நடப்பது என்ன? மக்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மை
>>> என்கிற நோக்கில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழர்களை ஒடுக்கிய
>>> காரணத்தாலும் புறக்கணித்ததாலும்தானே தனியீழக் கோரிக்க கிளர்ந்து
>>> எழுந்தது. வரலாறு தரும் இந்தப் பாடங்களை ஆள வந்தார்கள்
>>> சிந்திப்பார்களாக!.
>>>
>>> தெலங்கானா போராட்டம் ஏன்?
>>>
>>> 1. தெலங்கானா பேரியக்கமானது சாரத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப்
>>> போராட்டம். சாகுந் தருவாயிலுள்ள நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான
>>> போராட்டம். நிஜாம் நவாபின் மிகக் கொடுமையான ஆட்சிக்கெதிரான போராட்டம்.
>>> ஜமீன்தாரர்கள், ஜாகிர்தார்கள், தேஷ்முக்குகள், நிலப்பிரபுக்கள்
>>> ஆகியோருக்கு எதிரான மாபெரும் போராட்டம். கொத்தடிமைத்தனத்திற்கும்,
>>> மக்களிடமிருந்து பல வழிகளில் நிலங்களை பிடுங்கியதற்கும் எதிராக ஆரம்பித்த
>>> போராட்டம், நிலத்துக்கான போராட்டமாகவும் பன்சார், பன்சாரி நிலங்கள்,
>>> நிலப்பிரபுக்களால் பிடுங்கிக் கொள்ளப்பட்ட நிலங்கள்,
>>> நிலப்பிரபுக்களினுடைய நிலங்கள் ஆகியவற்றைப் பங்கிடுவதற்கான
>>> போராட்டமாகவும் முன்னேறியது.
>>>
>>> 2. இந்தப் போராட்டம், நிலப்பிரபுக்களுக்கெதிரான போராட்டமாக மட்டும்
>>> இருக்கவில்லை. நிஜாம் அரசின் ஆட்சியிலிருந்தும், நேரு அரசாங்கத்தின்
>>> இராணுவ ஆட்சியிலிருந்தும் தெலுங்கானா மக்களை விடுவிக்கும் போராட்டமாகவும்
>>> இருந்தது. (நூல்: மாபெரும் தெலங்கானா போராட்டம்.)
>>> -------------------------கலி.பூங்குன்றன் பொதுச் செயலாளர், திராவிடர்
>>> கழகம் -"விடுதலை" 12-12-2009
>>>
>>> 2009/12/16 saravanan n <citysaravanan@gmail.com>
>>>>
>>>> நன்றி நண்பரே ...
>>>> இதை பற்றி என்னுடைய தாழ்வான கருத்து என்னவென்றால் இந்த பிரிவினையை
>>>> ஆதரித்தால் நம் இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் தீவிரவாத சக்திகளின்
>>>> தூண்டுதலால் பிரிவினை பற்றிய போராட்டங்கள் தீவிரமாகும் ... நமது நாட்டின்
>>>> ஒருமைபாடு சீர்குலையும் என நான் நினைக்கிறேன் ...
>>>> 2009/12/13 ganga raj <chithradigital@gmail.com>
>>>>>
>>>>> நிச்சயமாய் மக்களின் தேவையை புரிந்து  கொள்ளாத அரசு தலைமை ஒவ்வொரு
>>>>> முறையும் 60  ஆண்டுகளாக  தனி தெலுங்கனா உருவாக்கப்படும் என வாக்குறுதி கொடுத்து
>>>>> வந்திருக்கிறார்கள் ஆடு தெரியாமல் இரவோடு இரவாக மாநிலம் பிரித்துவிட்டார்கள் என
>>>>> கூப்பாடு போடுவது என்பது முட்டாள்தனமாகவும்  அந்த மக்களின் சுய நிர்ணய வுரிமையை
>>>>> மறுப்பது எனவும் நான் எண்ணுகிறேன் வாதிட தயாரானவர்கள் தக்க ஆதாரத்தோடு பேசவும்
>>>>> வெறும் மாநிலத்தை பிரித்து விட்டார்கள் இந்தியாவை இடித்து விட்டார்கள் என
>>>>> உணர்ச்சி வசபடுபவர்கள் தவிர்க்க
>>>>>
>>>>>                                     நன்றி
>>>>>                ப. செ . கங்கையரசன்
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>> 2009/12/11 Joshi <rsartho@gmail.com>
>>>>>>
>>>>>> We shoot and kill that idiot " chandra sekara Rao " Bloody idiot... I
>>>>>> think is born in wrongly...
>>>>>>
>>>>>> 2009/12/11 saravanan n <citysaravanan@gmail.com>
>>>>>>>
>>>>>>> நண்பர்களே தெலுங்கானா பிரிவை தாங்கள் ஆதரிக்கிறீர்களா ... ?
>>>>>>> --
>>>>>>>
>>>>>>> உ.ந.சரவணன்
>>>>>>>
>>>>>>> --
>>>>>>> KADHAL
>>>>>>> kadhal@googlegroups.com
>>>>>>> http://groups.google.com/group/kadhal
>>>>>>
>>>>>>
>>>>>> --
>>>>>> With Regards,
>>>>>> -----------------------------------------------
>>>>>> JOSHI SANTHAN  SARTHO
>>>>>>
>>>>>> --
>>>>>> KADHAL
>>>>>> kadhal@googlegroups.com
>>>>>> http://groups.google.com/group/kadhal
>>>>>
>>>>> --
>>>>> KADHAL
>>>>> kadhal@googlegroups.com
>>>>> http://groups.google.com/group/kadhal
>>>>
>>>>
>>>> --
>>>> வாழ்த்துகளுடன்
>>>> உ.ந.சரவணன்
>>>>
>>>> --
>>>> KADHAL
>>>> kadhal@googlegroups.com
>>>> http://groups.google.com/group/kadhal
>>>
>>> --
>>> KADHAL
>>> kadhal@googlegroups.com
>>> http://groups.google.com/group/kadhal
>>
>>
>> --
>> இந்தியனாய் பிறந்தேன்.
>> இந்தியனாய்  இருப்பேன்.
>> இந்தியனாய்  இறப்பேன்.
>>
>> ராஜன்.
>>
>>
>> --
>> KADHAL
>> kadhal@googlegroups.com
>> http://groups.google.com/group/kadhal
>> http://loversindia.in
>
>
>
> --
>
>
>
>
>                               ப .செ. கங்கையரசன்
>
> --
> KADHAL
> kadhal@googlegroups.com
> http://groups.google.com/group/kadhal
> http://loversindia.in
>

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in

No comments:

Post a Comment