On 12/23/09, sk natarajan <sknatarajan007@gmail.com> wrote:
என் இனிய மனைவிக்கு
நினைத்துத் தான்
பார்க்கின்றேன் என்
வாழ்வில் உந்தன்
இனிய வரவை
நெகிழ்ச்சி யூட்டிய
ஒரு நாளில்
பலர் வாழ்த்த
நின் கரம் பற்றினேன்
அந்நாள் தொட்டு
இந்நாள் வரை
இணைந்து நடத்திய
இல்லறம் இன்பமே
ஆஹா..... வாழ்த்துக்கள் சாகி சார்....
ஏற்றமும் உண்டு
இறக்கமும் உண்டு
ஏறி இறங்காதது
அன்பு மட்டுமே
வாவ்...........................
மழலையர் மடிமீது
களிப்புற விளையாடிட
இம்மகிழ்விற்கு நிகர்
ஈடேது இணையேது
என்னில் உன்னையும்
உன்னில் என்னையும்
கண்ட பின்
களிப்பிங்கே மிகுந்ததே
அயராத உன் அன்பில்
ஆடித்தான் போனேனடி
ஆதரவாய் நீயிருக்க
என்னுலகம் வேறேதடி
பாட்டுமாதிரியே இருக்கு.....
தோழியாய் தொடர்ந்தாய்
தாதியாகவும் ஆனாய்
தாயாகவும் பரிமளிக்க
உன்னால் மட்டுமே முடியுமடி
இத்தனையும் இயல்பாய்
இசைத்த உன்னை
நான் இதயத்தின்
உச்சத்தில் வைக்கவா
வாழ்க்கையின் மிச்சத்தில்
உனக்கு சேயாக
நான் மாறி நித்தமும்
சேவகம் புரிந்திடவா
இந்த வரிகளுக்கு தலைவணங்குகிறேன்....
என் இதயங்கவர்ந்த கள்ளி
என் வேண்டுகோளை அள்ளி
என்ன வேண்டுமென சொல்லி
என் கடன் தீர்ப்பாயடி துள்ளி
அருமை சாகிசார்.....
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை... --
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
No comments:
Post a Comment