Monday, December 28, 2009

மென்தமிழ்.காம் - டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி ?!


மென்தமிழ்


டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி ?! - How to Change Blogger Template

Posted: 27 Dec 2009 11:19 PM PST

பிளாக்குகளை அழகாக்குவது எப்படி என்ற எனது முந்தைய கட்டுரையில் முக்கியமான பத்து விடயங்களைப் பட்டியலிட்டு இருந்தேன். அவை தொடர்பாக எழுந்த பல்வேறு வினாக்களுக்கு சரியான பதிலாக ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்குவது என்ற முடிவில் டெம்ப்ளேட்டை மட்டும் மாற்றுவது எப்படி என்பதை இங்கே காண்போம்.

உதாரணமாக ஒரு பிளக்கைக் காண்போம்.

http://mentamildotcom.blogspot.com/

இந்த பிளாக்கின் தோற்றமானது கீழ்க்கண்ட படத்தினைப் போன்று காட்சியளிக்கும். இந்த பிளாக்கின் தோற்றத்தில் உள்ள குறைகள் என்னவெனில் இந்த பிளாக்கிற்கான தலைப்புப் படம் இல்லை. மற்றும் பதிவுகளுக்கென வரயறுக்கப்பட இடமானது மிகவும் குறைவாக உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்களும் வருகையாளர்களைக் கவரும் வகையில் இல்லை.



இனி உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டைத் தேட வேண்டும். முன்னரே கூறியது போல் கூகிளில் சென்று "Download Blogger Template" என இட்டு தேடினால் இலவசமாக டெம்ப்ளேட்டை அளிக்கும் ஏனைய இணைய தளங்கள் கிடைக்கும்.



ஒவ்வொரு தளமும் விதவிதமான வண்ணங்களில், வடிவங்களில், வடிவமைப்புக்களில் வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுக்களைப் பட்டியலிடும். அவற்றில் பிடித்தமானவற்றைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக கீழே கொடுக்கப்பட்ட டெம்ப்ளேட்டில் "Demo" மற்றும் "Download" என இரு பட்டன்களைக் காணலாம்.


இதில் demo வைச் சொடுக்கி பிளாக்கின் மாதிரி வடிவத்தைக் காணலாம்.



இந்த டெம்ப்ளேட் உங்களுக்கு பிடித்துள்ளது எனில் download சொடுக்கி zip வடிவக் கோப்பை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.



பின் zip ( உ.தா. christmas-new-year-eve-template.zip) வடிவக் கோப்பை கலைந்தால் (extract) உங்களுக்கு .xml extension ( உ.தா. christmas-new-year-eve-template.xml) கொண்ட ஒரு கோப்பு கிடைக்கும்.

இந்த .xml கோப்பில் தான் புது டெம்ப்ளேட்டுக்கான நிரல் அடங்கியுள்ளது என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்.


நமக்குத் தேவையான டெம்ப்ளேட் நிரல் தயாராகி விட்டது. அதனை நமது வலைப்பூவில் எவ்வாறு உள்ளீடு செய்வது என்பதைக் காண்போம். ஒவ்வொரு முறை டெம்ப்ளேட் உள்ளீடு செய்யும் போது ஏற்கனவே உள்ள அமைப்புக்களை சேமித்துக் கொள்வது சிறந்தது. உங்களுக்கு தேவையான, முக்கியமான நிரல் எதுவும் காணாமல் போயிருப்பின் அதை திருப்பிக் கொணர இந்த சேமிப்பு மிக உதவும். ஆகையினால் கீழ்க்கண்ட சுட்டியில் சென்று சேமித்துக் கொள்ளவும்.

பழைய டெம்ப்ளேட்டை சேமித்தல்

1. டேஷ்போர்டுக்குச் செல்லுங்கள்.
2. உங்கள் வலைத்தளத்திலுள்ள Layout க்குச் சென்று Edit HTML ஐ சொடுக்குங்கள்.
3. அங்குள்ள உள்ள Download Full Template ஐ சொடுக்குங்கள்.

4. தொடர்வரும் விண்டோவில் save file தேர்வு செய்து எங்கு சேமிக்க வேண்டும் என தேர்வு செய்துகொள்ளுங்கள். எங்கு சேமிக்க வைக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் கோப்பானது template-8450175452115241639.xml என்ற வகையில் ஏராளமான எண்களைக் கொண்டதாய் இருக்கும்.
5. இந்தக் கோப்பின் பெயரை மிக தெரியும் வகையில் சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. அதாவது mentamiltestblog-dec-28-2009 என்பனவாக இருந்தால் எளிதில் இந்தக் கோப்பை அடையாளம் காண முடியும்.

தற்போது தரவிறக்கம் செய்யப்பட்ட xml ( உ.தா. christmas-new-year-eve-template.xml ) எவ்வாறு உள்ளீடு செய்வது என்பதைக் காண்போம்.

புதிய டெம்ப்ளேட்டை உள்ளீடு செய்தல்

1. டேஷ்போர்டுக்குச் செல்லுங்கள்.
2. உங்கள் வலைத்தளத்திலுள்ள Layout க்குச் சென்று Edit HTML ஐ சொடுக்குங்கள்.
3. அங்குள்ள Backup / Restore Template என்னும் பகுதியில் Browse பட்டனைச் சொடுக்கி சேமிக்கப்பட்ட xml கோப்பை தேர்ந்தெடுங்கள். இங்கு கொடுக்கப்பட்ட உதாரணத்தின் படி christmas-new-year-eve-template.xml.

4. கோப்பைத் தேர்வு செய்த பின் upload பட்டனைச் சொடுக்குங்கள்.

5. நிரலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உறுதி செய்யச்சொல்லி Confirm & Save பட்டன் வருமாயின் அதனையும் சொடுக்குங்கள்.
6. புதிய நிரல் சேமிக்கப்பட்டதை உணர்த்த கீழ்க்கண்ட தகவல் தோன்றும்.

7. தற்போது View Blog சொடுக்கி உங்களின் பக்கத்தைக் காணுங்கள். நீங்கள் முன்பு மாதிரியில் பார்த்த அதே தோற்றம் உங்கள் வலைப்பூவில் தோன்றுவதைக் காணலாம்.


இக்கட்டுரை உங்களுக்கு புரியும்படியும் தெளிவாகவும் இருக்கும் என நினைக்கிறேன். இவைகளை முயன்று பார்த்துவிட்டு அய்யங்கள் இருப்பின் மறக்காமல் மறுமொழியிடுங்கள்.

You are subscribed to email updates from மென்தமிழ்
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610



--
வாழ்க தமிழுடன்,
நிலவன்.

http://www.mentamil.com
http://www.bangaloretamil.com

--
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
 
URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
If you are unable to read Tamil Fonts or to type Tamil...
Please install ekalappai20b_anjal.zip from http://groups.google.com/group/Tamil2Friends/web/ekalappai20b_anjal.zip
For Online Thamizh Typing Use the Link :http://tamil2friends.com/tamil or http://www.google.com/transliterate/indic/Tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment