Friday, February 5, 2010

Re: ♥ : காதலைச் சொல்லணுமா ? கொஞ்சம் ஜாலி ஐடியாஸ்…

hello boss sema sema

On 2/4/10, m rajan <kmurajan@gmail.com> wrote:

இது வேலண்டைன் காலம் !..

1. காதலைச் சொல்ல பூக்கள் பயன்படுவது பல்லாயிரம் காலப் பழசு. ஆனால் அதை வெச்சே காலத்துக்கேற்ப ஜாலியாகவும், ரொமாண்டிக்காகவும், ஹைடெக் ஆகவும் காதலைச் சொல்லலாம். இந்த ஐடியாவை டிரை பண்ணி பாருங்கள். ஒரு கொத்து ரோஜாப்பூக்களை எடுத்துக் கொண்டு உங்கள் ஏஞ்சல் முன்னால் நீட்டுங்கள். அவள் குழப்பமாய்ப் பார்க்கும் போது,"ஒண்ணுமில்லை டியர், நீ எவ்ளோ அழகுன்னு இந்தப் பூக்களுக்குக் காட்டினேன்" என்று கவிதையாய்ச் சொல்லிப் பாருங்கள். உங்கள் ரசனையிலேயே சறுக்கி விட்டால் வேலண்டைன் ஜாலி தான். 

2. சட்டென்று அவளிடம் போய் 'ஐயோ, உங்க கால் வலிக்குதா ? " என்று கேளுங்கள்.  எவண்டா இவன் என் கிட்டே வந்து கால் வலிக்குதா என்று கேட்கிறானே என்று அவள் தலையைச் சொறிவாள். "இல்லை என்னோட சிந்தனைகள் முழுக்க முழுக்க கொஞ்ச நாளா நீங்க தான் ஓடிட்டே இருக்கீங்க. அதான் கேட்டேன்" என்று சொல்லுங்கள். "ஆமா.. உன்னை விட்டு ரொம்ப தூரமா போகணும்ன்னு தான் தலை கால் புரியாம ஓடிட்டே இருந்தேன் என்று பார்ட்டி சொன்னால் உடனே எஸ்கேப் ஆகி விடுங்கள். சிரித்தால் அந்த நூலைப் பிடித்துக் கொண்டு பட்டம் விடுங்கள்.
 

3. "எக்ஸ்கியூஸ் மி, உங்க கிட்டே மேப் இருக்கா ?" என்று அவளுடைய கண்களைப் பார்த்துக் கொண்டு காதல் மிதக்க மிதக்க கேளுங்கள். "மேப்பா ? எதுக்கு ?" என அவள் தனது மருண்ட விழிகளை உருட்டும் போது, "இல்லே.. உங்க கண்ணுக்குள்ள நான் தொலைஞ்சு போயிட்டேன். எப்படி வெளியே வர்றதுன்னு தெரியல.. அதான்…' என்று வசீகரியுங்கள். முறைத்தால் சுற்றுலாப் பயணி போல சட்டென்று வேறு எதையாவது பார்க்க ஆரம்பித்து விடுங்கள். சிரித்தால் "கண்ணே கலைமானே…" என பாட ஆரம்பியுங்கள்.
 
4. உங்கள் அழகு தேவதை ஸ்டைலாக தனியே நிற்கும் போது அருகில் செல்லுங்கள். "ரொம்ப ஆச்சரியமா இருக்குங்க" என்று சொல்லி அவளை மேலும் கீழும் பாருங்கள். "என்ன ஆச்சரியம்.." என அவள் உள்ளுக்குள் ஆச்சரியத்தை ஒளித்து வைத்துக் கொண்டு சர்வ சாதாரணமாய்க் கேட்பாள். "இல்லே…. தேவதைகள் தரையில கூட நடக்குமா ? சொர்க்கத்துல தானே இருக்கும்" என்று சொல்லுங்கள். பார்ட்டி வெட்கப் பட்டால் ஒர்க் அவுட் ஆகிவிட்டது என்று பொருள். மாறாக "எத்தினி வாட்டி மேன் நீ சொர்க்கத்துக்கு போயிருக்கே" என திருப்பிக் கேட்டால் சொர்க்கமோ நரகமோ ஆளை விடுடா சாமின்னு ஓடி விடுங்கள்.

5. உங்கள் ஹைடெக் கிளி ஹெட்போனில் பாட்டை ரசித்துத் தலையாட்டிக் கொண்டிருக்கும் போது அருகே செல்லுங்கள். "ஹாய்" என்று சொல்லுங்கள். மெதுவாக வால்யூமைக் குறைத்துக் கொண்டே "வாட் ?" என கேட்பவளிடம் சொல்லுங்கள். "உனக்கு முதல் பார்வையிலேயே காதல் வரும் என்ற நம்பிக்கை உண்டா ? இல்லேன்னாலும் பரவாயில்லை, இன்னொரு வாட்டி வரேன் ? என்ன சொல்றீங்க ? " என்று கேளுங்கள். பார்ட்டி வால்யூமை சகட்டு மேனிக்கு ஏற்றினால் "ப்ப்ப்ப்ப்போடா .." என்று அர்த்தம். காதிலிருந்து மெல்ல ஹெட்போனைக் கழற்றினால் ஆஹா.. என்று அர்த்தம்.

6. புத்தகத்தைப் படித்துக் கொண்டு கற்பனை உலகில் மூழ்கி இருக்கும் உங்கள் ஒருதலைக் காதலியிடம் செல்லுங்கள். "எக்ஸ்கியூஸ் மி… உங்க கிட்டே பேண்ட் எய்ட் இருக்கா ? பிளீஸ்… " என்று கேளுங்கள். நான் என்ன மெடிக்கஸ் ஸ்டோர்ன்னு நினைச்சியாடா மவனே என்பது போல ஒரு லுக் வரும். உடனே "உங்களைப் பார்த்ததும் காதலில் விழுந்தேன். அடிபட்டிடுச்சு.. அதான் கேக்கறேன்" என்று சொல்லிப் பாருங்கள். தர்ம அடி விழுந்தால் நான் பொறுப்பல்ல. பட், ஒர்க் அவுட் ஆனால் மறக்காம டிரீட் வையுங்க, கலந்துக்கறேன்.
 
7. பார்ட்டி உங்களோட சக தோழி என்றால் சமாச்சாரம் ரொம்ப சிம்பிள். "ஹாய்.. எனக்கு தூங்கவே புடிக்கல" என்று ஒரு இசை போல சொல்லுங்கள். "ஏண்டா ? உடம்பு சரியில்லயா ?" என்று பார்ட்டி கேட்கும். "அப்படியில்ல, கனவை விட நிஜம் அழகா இருந்தா நான் ஏன் தூங்கணும்" என்று சொல்லி விட்டு சட்டென அவள் கண்ணைப் பாருங்கள். அவள் கண்ணில் வெட்கம் தெரிந்தால் வலையில் சிக்கியது விண்மீன் என்று அர்த்தம். கோபம் தெறித்தால், ஐ..மீன்… இந்த இயற்கை அவ்வளவு அழகு என்று ஏதாவது சொல்லி எக்கச்சக்கமாக வழியுங்கள்.

8. லவ் சொல்லிச் சொல்லி ஏத்துக்காத பொண்ணு கிட்டே மல்லாடறீங்களா ? இந்த ஐடியாவை டெஸ்ட் பண்ணி பாருங்க. பார்ட்டி கிட்டே பவ்யமா போய் "நான் உன்னோட கண்ணில் உள்ள ஒரு கண்ணீர் துளியா இருந்திருக்கலாம். உன்னோட கண்ணில் பிறந்து, கன்னம் நடந்து, உதட்டில் விழுந்து உயிரை விட்டிருப்பேன். ஒருவேளை கனவில் மட்டும் தான் நீ வருவேன்னா… நான் காலம் முழுதும் முழிக்காம இருக்கவும் நான் ரெடி " என்று செண்டிமெண்ட் டிரை பண்ணிப் பாருங்கள். அடித்தால் ஜாக்பாட். இல்லையேல் இன்னொரு ஐடியா. நான் சொல்லி நீங்க நிப்பாட்டவா போறீங்க ?

9. புதுசா ஒரு பொண்ணைப் பாக்கறீங்க காலேஜ்ல. சட்டென்று மனசுக்குள்ள ஒரு நாலு கிலோ மின்னல் வெடிச்சு சிதறுதுன்னு வெச்சுக்கோங்க. கொஞ்சம் பீட்டர் வுடுங்க. "ஹேய்.. ஆர் யூ ஃபிரீ… ?" என்று ஆங்கிலத்தில் கொஞ்சுங்கள். "யா…" என்று ஒரு காபி குடிக்கும் ஆசையில் அவள் சொன்னால், "ஐ..மீன், ரெஸ்ட் ஆஃப் யுவர் லைஃப் ?" என்று ஒரு கொக்கியை வீசுங்கள். அவளுடைய பார்வையிலேயே தெரிந்து விடும் அவளுக்குத் தேவை காபியா கல்யாணமா என்பது.
 
10.  "ஹேய் உனக்கொரு விஷயம் தெரியுமா" என்று அந்தப் பெண்ணிடம் கேளுங்கள். கண்ணில் ரொம்ப ஆச்சரியமும், வியப்பும் நிரம்பி இருக்கட்டும். "என்ன… என்ன.. என்று அவள் கேட்பாள் " இங்கிலீஷ் எழுத்துக்களில யூவையும், ஐ யையும் பக்கத்துல பக்கத்துல வெச்சுட்டாங்களாம்… ஏன்னா, யூ & ஐ… ஹி..ஹி.." என்று சொல்லுங்கள். இது ஏதோ ஒரு உலக மஹா ஜோக் போல ஆளு சிரிச்சா பார்ட்டி அவைலபிள் ன்னு அர்த்தம். "எத்தினி வாட்டிடா எல்கேஜில தோத்தே…" ன்னு திருப்பி கேட்டா "கிளம்பு காத்து வரட்டும்…" ன்னு அர்த்தம்

YOURS

           RAJAN

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment