Thursday, February 4, 2010

Re: ♥ : Įதமிழ் இலக்கியத்தில் நான் ரசித்த சில காதல்

அன்னாய் வாழி வேண்டன்னை
நம் படப்பை தேன் மயங்கு பாலினும்
இனிய அவர் நாட்டு உவளை கூவர்க்கீழ
மானுண்டெஞ்சிய கழிழி நீரே.............

இதுவும் ஒரு சிற்ப்பான காதல் வெளிப்பாடே.........


10/2/4 Kathir <ktrn01d@gmail.com>:
> அருமையான காதல் காட்சிகள்..... அனுபவம் அதிகம் உள்ளவரோ நீங்கள்..........
>
> கதிர்
>
> 2010/2/4 m rajan <kmurajan@gmail.com>
>>
>> Įதமிழ் இலக்கியத்தில் நான் ரசித்த சில காதல் காட்சிகள்
>> பிற மொழிகள் சொல்லுக்கு இலக்கணம் வகுத்து தங்கள் மொழிகளை வளர்க்க முற்படும்
>> சமயத்தில் ,பொருளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்க்கையை இப்படித்தான் வாழ
>> வேண்டுமென்று வாழ்ந்து காட்டியவர்கள் தமிழர்கள்.காதலுக்கும் வீரத்திற்கும்
>> கோவில் கட்டி கும்பிட்டவர்கள் தமிழர்கள்.வீரம் இல்லாத ஆணை எப்பெண்ணும்
>> காதலித்ததில்லை என்று இலக்கியம் கூறுகிறது.
>> தமிழ் இலக்கியத்த்தில் கரை கண்டவள் இல்லை நான்.ஆனால் நான் படித்து ரசித்த சில
>> காதல் காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
>> காதல் என்றால் என்ன என்று வரையறுத்து காட்டுகிறார் இந்த புகழ் பெற்ற கவிஞர் .
>> "நீயும் நானும் யாராகியரோ?
>> நிந்தையும் நுந்தையும் எம்முறை க்கேளிர்?
>> நீயும் நானும் எவ்வழி அறிதும்?
>> செம்புல பெயனீர் போல அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே!"
>> நீ யாரோ,நான் யாரோ,உண் தந்தையும் என் தந்தையும் நண்பர்கள்
>> அல்லர்.இருந்தாலும்,மழை என்ற தலைவனுக்காக நிலமங்கை காத்திருக்க,மழை என்னும்
>> வாலிபன் ஓடி வந்து நிலமன்கையை தழுவ,அன்பு கொண்ட அவ்விரு நெஞ்சங்கள் கலந்தது
>> போல் நீயும்,நானும் ஒருவருக்க்காகவே மற்றொருவர் பிறந்துள்ளோம்,எனவேதான் நம்
>> நெஞ்சங்கள் மாறிப் புகுந்தன"என்கிறான் ஒரு வாலிபன்
>> இந்த மறக்க முடியாத வரிகளை எழுதிய கவிஞர் யார் என்று தெரியாத
>> நிலையில்,அவருக்கு செம்புலப் பெய நீரார் என்று ,அவரது கவிதை வரிகளையே பெயரிட்டு
>> மழிழ்கிறோம் நாம்.
>> சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளோ,காதலுக்கு மற்றொரு விளக்கம் தருகிறார்.
>> "உருவாலும் ,திருவாலும்
>> குலத்தாலும் குணத்தாலும் ஒன்றிய ஓர் தலைவனும் தலைவியும்
>> அடுப்பரும் கொடுப்பாரும் இன்றி, ஊழ்வினை பயனால் எதிர்ப்பட்டு
>> ஒருவரை ஒருவர் புணர்தலே காதல்"என்கிறார்."
>> விளக்கமே தேவைப்படாத அருமையான வரிகள்.காதல் சிறந்ததே ஆனாலும் அது
>> வாழவேண்டுமென்றால் ஆணும் பெண்ணும் நல்ல ஜோடியாக இருக்க வேண்டுமென்று இளங்கோ
>> கூறுவது எக்காலத்திற்கும் ஏற்ற சொல் அல்லவா?
>> தமிழர்கள் தம் வாழ்க்கையை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாளை என்று தம்
>> இலக்கியத்தில் அழகாகப் பிரித்து அதற்க்கு சுவை ஊட்டி மக்திந்தனர்.
>> குறிஞ்சி என்பது,இருத்தலும்,இருத்தல் நிமித்தமும்
>> முல்லை என்பது கூடலும் கூடல் நிமித்தமும்
>> மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமுன் அடுத்து பாலை என்பதோ பிரிதலும் பிரிதல்
>> நிமித்தமும்
>> என்று வாழ்கையை வகையாக சுவைத்து மகிழ்ந்தனர் தமிழர்கள்.
>> எந்த எந்த பிரிவில் என்ன என்ன கவிதைகளை நான் படித்தேன் என்பது,இந்த நாற்பது
>> வருடங்களில் சற்று மறந்தாலும் கவிதைகள் மறக்கவிக்ல்லை.உங்கள் அனுமதியுடன்
>> என்னைக் கவர்ந்த சில காதல் கட்சிகள் இதோ.
>> நான் மடத்து உப்பரிகையில் அவள் நின்றிக்க ஒரு இளைஞனை காணுகிறாள்.உதயகுமாரன்
>> என்ற பட்டத்து இளவரசன் அவன்.மெல்லிய பூங்கோடியளன இந்த பெண்ணின் மனம் கட்டழகனான
>> அவனிடத்தில் தஞ்சம் புகுந்துவிடுகிறது,அவள் அறியாமலேயே.அவன் போன பின்தான் அந்த
>> இளைஞன் தன் மனத்தையும் கொண்டு சென்று விட்டான் என்பதை உணர்ந்து
>> கொள்கிறாள்.நங்கையின் மனம் வாடுகிறது.
>> "புதுவோன் பின்னர் போனதென் நெஞ்சம்
>> இதுவோ அன்னாய் காதலின் இயற்கை
>> இதுவே ஆயின் ஒழிக அதன் திறம்"என்று வெம்புகிறாள்,விம்முகிறாள்,மாதவியின்
>> மகள்,மணிமேகலை.
>> அவளுடன் சேர்ந்து நம் கண்களும் கலங்குகிறது அல்லவா?
>> காட்டிலே வனவாசம் செய்யும் ராமனுக்கும்,சீதைக்கும் காதல் மறக்கவில்லை.பிரிக்க
>> முடியாத காதலில் கட்டுன்றவர்கள் அல்லவா இந்த தெய்வத் தம்பதிகள்?
>> ஒரு ஓடைக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் ராமனும் சீதையும் ஒரு கட்சியை கண்டு
>> கழிக்கிறார்கள்,சிரிக்கிறார்கள்.என்ன அந்த கட்சி?
>> "ஊதும் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும் சீதையின் நடையை நூக்கி சிறியதோர்
>> முறுவல் செய்தான்
>> மாதவள் தானும் அங்கு வந்து நீர் உண்டு மீளும்
>> போதகம் நடப்ப நோக்கி புதியதோர் முறுவல் செய்தாள்."என்கிறார் ஒப்பிலாக் கவி
>> கம்பனார்.
>> அன்னத்தின் நடையைக் கண்டு தன் சீதையின் நடையுடன் அதை ஒப்பிட்டு ராமன்
>> சிரிக்க,கம்பீரமாக நடக்கும்,யானையின் நடையை நோக்கி அதை தன் தலைவனின் நடையுடன்
>> ஒப்பிட்டு மகிழ்கிறாள் சீதை.
>> நெஞ்சை நேகிள்கும் அருமையான காதல் வரிகள் இவை.
>> பாரதியின் கண்ணம்மா பாட்டுகளுக்கு இணையான காதல் பாட்டுகளும் உண்டோ?
>> காட்டு வெளியினில் கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்று தலைவன்
>> பாடும்போது கல் நெஞ்சத்திலும் காதல் மணம் வீசத் தொடங்கும் அல்லவா? பாரதிதாசனோ
>> ஒரு காதல் கட்சியை தானும் அனுபவித்து நம்மையும் அனுபவிக்க செய்கிறார்.
>> "கூடத்திலே மனப்பாடத்திலே
>> விழி கூடிக்க் கிடந்திட்ட ஆணழகை
>> ஓடை குளிர் மலர்ப் பார்வையினால் அவள் உண்ணத் தலைப் படும் நேரத்திலே
>> பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில் பட்டுத் தெறித்தது மானின் விழி
>> ஆடை திருத்தி நின்றால் இவள்தான் ,இவன் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான்"
>> என்ன ஒரு அழகிய காட்சி?கட்டழகனான தன் மனம் கவர்ந்தவனின் அழகை அவள் அவன்
>> அறியாமல் உண்டு களிக்க
>> அதை கவனித்து விட்டான் அவன்.தமிழட்சியான இவளோ தனக்கே உரிய இயல்பாக தன்
>> மேலாடையை திருத்தி நிற்கிறாள்.
>> இதை விட அழகாக ஒரு பெண்ணின் மனத்தை யாரால் வர்ணிக்க முடியும்,சொல்லுங்கள்?என்
>> நெஞ்சம் கவர்ந்த பாடல் இது.
>> YOURS
>>  RAJAN
>>
>> --
>> KADHAL
>> kadhal@googlegroups.com
>> http://groups.google.com/group/kadhal
>> http://tamil2friends.com
>
> --
> KADHAL
> kadhal@googlegroups.com
> http://groups.google.com/group/kadhal
> http://tamil2friends.com
>

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment