Thursday, February 4, 2010

Re: ♥ : Įதமிழ் இலக்கியத்தில் நான் ரசித்த சில காதல்

அருமையான காதல் காட்சிகள்..... அனுபவம் அதிகம் உள்ளவரோ நீங்கள்..........

கதிர்

2010/2/4 m rajan <kmurajan@gmail.com>
Įதமிழ் இலக்கியத்தில் நான் ரசித்த சில காதல் காட்சிகள்
பிற மொழிகள் சொல்லுக்கு இலக்கணம் வகுத்து தங்கள் மொழிகளை வளர்க்க முற்படும் சமயத்தில் ,பொருளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டுமென்று வாழ்ந்து காட்டியவர்கள் தமிழர்கள்.காதலுக்கும் வீரத்திற்கும் கோவில் கட்டி கும்பிட்டவர்கள் தமிழர்கள்.வீரம் இல்லாத ஆணை எப்பெண்ணும் காதலித்ததில்லை என்று இலக்கியம் கூறுகிறது.
தமிழ் இலக்கியத்த்தில் கரை கண்டவள் இல்லை நான்.ஆனால் நான் படித்து ரசித்த சில காதல் காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
காதல் என்றால் என்ன என்று வரையறுத்து காட்டுகிறார் இந்த புகழ் பெற்ற கவிஞர் .
"நீயும் நானும் யாராகியரோ?
நிந்தையும் நுந்தையும் எம்முறை க்கேளிர்?
நீயும் நானும் எவ்வழி அறிதும்?
செம்புல பெயனீர் போல அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே!"
நீ யாரோ,நான் யாரோ,உண் தந்தையும் என் தந்தையும் நண்பர்கள் அல்லர்.இருந்தாலும்,மழை என்ற தலைவனுக்காக நிலமங்கை காத்திருக்க,மழை என்னும் வாலிபன் ஓடி வந்து நிலமன்கையை தழுவ,அன்பு கொண்ட அவ்விரு நெஞ்சங்கள் கலந்தது போல் நீயும்,நானும் ஒருவருக்க்காகவே மற்றொருவர் பிறந்துள்ளோம்,எனவேதான் நம் நெஞ்சங்கள் மாறிப் புகுந்தன"என்கிறான் ஒரு வாலிபன் 
இந்த மறக்க முடியாத வரிகளை எழுதிய கவிஞர் யார் என்று தெரியாத நிலையில்,அவருக்கு செம்புலப் பெய நீரார் என்று ,அவரது கவிதை வரிகளையே பெயரிட்டு மழிழ்கிறோம் நாம்.
சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளோ,காதலுக்கு மற்றொரு விளக்கம் தருகிறார்.
"உருவாலும் ,திருவாலும்
குலத்தாலும் குணத்தாலும் ஒன்றிய ஓர் தலைவனும் தலைவியும்
அடுப்பரும் கொடுப்பாரும் இன்றி, ஊழ்வினை பயனால் எதிர்ப்பட்டு
ஒருவரை ஒருவர் புணர்தலே காதல்"என்கிறார்."
விளக்கமே தேவைப்படாத அருமையான வரிகள்.காதல் சிறந்ததே ஆனாலும் அது வாழவேண்டுமென்றால் ஆணும் பெண்ணும் நல்ல ஜோடியாக இருக்க வேண்டுமென்று இளங்கோ கூறுவது எக்காலத்திற்கும் ஏற்ற சொல் அல்லவா?
தமிழர்கள் தம் வாழ்க்கையை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாளை என்று தம் இலக்கியத்தில் அழகாகப் பிரித்து அதற்க்கு சுவை ஊட்டி மக்திந்தனர்.
குறிஞ்சி என்பது,இருத்தலும்,இருத்தல் நிமித்தமும் 
முல்லை என்பது கூடலும் கூடல் நிமித்தமும்
மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமுன் அடுத்து பாலை என்பதோ பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
என்று வாழ்கையை வகையாக சுவைத்து மகிழ்ந்தனர் தமிழர்கள்.
எந்த எந்த பிரிவில் என்ன என்ன கவிதைகளை நான் படித்தேன் என்பது,இந்த நாற்பது வருடங்களில் சற்று மறந்தாலும் கவிதைகள் மறக்கவிக்ல்லை.உங்கள் அனுமதியுடன் என்னைக் கவர்ந்த சில காதல் கட்சிகள் இதோ.
நான் மடத்து உப்பரிகையில் அவள் நின்றிக்க ஒரு இளைஞனை காணுகிறாள்.உதயகுமாரன் என்ற பட்டத்து இளவரசன் அவன்.மெல்லிய பூங்கோடியளன இந்த பெண்ணின் மனம் கட்டழகனான அவனிடத்தில் தஞ்சம் புகுந்துவிடுகிறது,அவள் அறியாமலேயே.அவன் போன பின்தான் அந்த இளைஞன் தன் மனத்தையும் கொண்டு சென்று விட்டான் என்பதை உணர்ந்து கொள்கிறாள்.நங்கையின் மனம் வாடுகிறது.
"புதுவோன் பின்னர் போனதென் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காதலின் இயற்கை
இதுவே ஆயின் ஒழிக அதன் திறம்"என்று வெம்புகிறாள்,விம்முகிறாள்,மாதவியின் மகள்,மணிமேகலை.
அவளுடன் சேர்ந்து நம் கண்களும் கலங்குகிறது அல்லவா?
காட்டிலே வனவாசம் செய்யும் ராமனுக்கும்,சீதைக்கும் காதல் மறக்கவில்லை.பிரிக்க முடியாத காதலில் கட்டுன்றவர்கள் அல்லவா இந்த தெய்வத் தம்பதிகள்? 
ஒரு ஓடைக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் ராமனும் சீதையும் ஒரு கட்சியை கண்டு கழிக்கிறார்கள்,சிரிக்கிறார்கள்.என்ன அந்த கட்சி?
"ஊதும் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும் சீதையின் நடையை நூக்கி சிறியதோர் முறுவல் செய்தான்
மாதவள் தானும் அங்கு வந்து நீர் உண்டு மீளும் 
போதகம் நடப்ப நோக்கி புதியதோர் முறுவல் செய்தாள்."என்கிறார் ஒப்பிலாக் கவி கம்பனார்.
அன்னத்தின் நடையைக் கண்டு தன் சீதையின் நடையுடன் அதை ஒப்பிட்டு ராமன் சிரிக்க,கம்பீரமாக நடக்கும்,யானையின் நடையை நோக்கி அதை தன் தலைவனின் நடையுடன் ஒப்பிட்டு மகிழ்கிறாள் சீதை.
நெஞ்சை நேகிள்கும் அருமையான காதல் வரிகள் இவை.
பாரதியின் கண்ணம்மா பாட்டுகளுக்கு இணையான காதல் பாட்டுகளும் உண்டோ?
காட்டு வெளியினில் கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்று தலைவன் பாடும்போது கல் நெஞ்சத்திலும் காதல் மணம் வீசத் தொடங்கும் அல்லவா? பாரதிதாசனோ ஒரு காதல் கட்சியை தானும் அனுபவித்து நம்மையும் அனுபவிக்க செய்கிறார்.
"கூடத்திலே மனப்பாடத்திலே
விழி கூடிக்க் கிடந்திட்ட ஆணழகை
ஓடை குளிர் மலர்ப் பார்வையினால் அவள் உண்ணத் தலைப் படும் நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில் பட்டுத் தெறித்தது மானின் விழி
ஆடை திருத்தி நின்றால் இவள்தான் ,இவன் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான்"
என்ன ஒரு அழகிய காட்சி?கட்டழகனான தன் மனம் கவர்ந்தவனின் அழகை அவள் அவன் அறியாமல் உண்டு களிக்க
அதை கவனித்து விட்டான் அவன்.தமிழட்சியான இவளோ தனக்கே உரிய இயல்பாக தன் மேலாடையை திருத்தி நிற்கிறாள்.
இதை விட அழகாக ஒரு பெண்ணின் மனத்தை யாரால் வர்ணிக்க முடியும்,சொல்லுங்கள்?என் நெஞ்சம் கவர்ந்த பாடல் இது.
YOURS
 RAJAN

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment